உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணிகளுக்கான கொரோனா தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முகக்கவசம் பயன்படுத்துவது தொடர்பான முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
விமான பயணத்தின் போது முக கவசம் அணியாத பயணிகளுக்கு இனி அபராதம் விதிக்கப்படாது எனவும் விமான பயணிகள் உள்நாட்டு அல்லது சர்வதேச விமானங்களில் பயணிக்கும் போது மட்டுமே முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக முக கவசம் அணிவது கட்டாயம் என அரசு அறிவித்து இருந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைந்துள்ளதால் இந்த விதிகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.