தனியார் விமான நிறுவனமான விஸ்டாரா ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதற்கு பெயர் ஃபிரீடம் ஃபேர்ஸ். இந்த திட்டத்தின் மூலம் விமான டிக்கெட் கட்டணத்துடன் 499 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்தினால், நீங்கள் நிறைய மாற்றங்களை செய்து கொள்ளலாம். இந்த கூடுதல் கட்டணம் எகானமி, பிரீமியம் எகானமி கிளாஸ் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும். பிசினஸ் பயணிகளுக்கு இது இலவசம், இந்த திட்டத்தை பயன்படுத்தும் பயணிகள் கூடுதலாக 5 கிலோ பொருட்களை எடுத்துச் செல்லலாம்.
விமானம் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு இதை பயன்படுத்தி நீங்கள் பல மாற்றங்களை செய்து கொள்ளலாம். விமானம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எகானமி பயணிகள் ஒரு மாற்றத்தையும், 48 மணி நேரத்திற்குள் பிரீமியம் எகானமி பயணிகள் இரண்டு மாற்றங்களையும் செய்து கொள்ளலாம். விஸ்டாரா நிறுவனம் அண்மையில் டிக்கெட்டுகளுக்கு அதிகளவு தள்ளுபடியை தந்தது. இதனால் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தது. மழை கால சலுகையாக ஜூன் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 25ஆம் தேதி நள்ளிரவு வரை இந்த சலுகை விற்பனை நடைபெறும்.