Categories
உலக செய்திகள்

விமான போக்குவரத்தை தொடங்கிய சீனா…50 நாடுகளுடன் விமான சேவை…!!!

50 நாடுகளுடன் பயணிகள் விமான போக்குவரத்தை  சீனா தொடங்கியுள்ளது.

உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்றை பரப்பிய சீனா, தற்போது அதன் நாட்டில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. கொரோனா பரவலைத்தொடர்ந்து சர்வதேச விமான சேவையில்  பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் சீனாவில் வெளிநாடுகளுடனான சிவில் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுவிட்டது.

அங்கு தற்போது  50 நாடுகளுடன் பயணிகள் விமான சேவை நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்து சீன சிவில் விமான போக்குவரத்து துணை இயக்குனர் உ ஷிஜி கூறும் போது, “கடந்த ஆகஸ்டு 12ஆம்  தேதி நிலவரத்தின் படி, 50 நாடுகளுடனும், பிராந்தியங்களுடனும் சீன சிவில் விமான போக்குவரத்து நடந்து கொண்டிருக்கிறது. 93 விமான நிறுவனங்கள் 210 திரும்பும் விமான சேவையையும், 187 வழக்கமான தடங்களில் வாரம்தோறும் மேற்கொள்கின்றன” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |