Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விமான விபத்தில் உயிரிழந்தவருக்கு கொரோனா – கேரள சுகாதாரத்துறை

நேற்று கேரள கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் விமானி உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது உயிர் இழந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறை இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விமானத்தில் பயணம் செய்து, செய்து சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |