கேரளா விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்து நடந்த இடத்தை மத்திய வான்வழிபோக்குவரத்து அமைச்சர் ஹர்திப்சிங் புரி பார்வையிட்டார். அதற்குப் பிறகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்பது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 12 வயது குறைந்தவர்களாக இருந்தால் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் அளிக்கப்படும்
அதேபோல இந்த விபத்தில் அதிகம் காயமடைந்தவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் நஷ்டஈடு அளிக்கப்படும், லேசான காயங்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள், சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பியவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு அறிவிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஏர் இந்தியா தரப்பில் இருந்து இந்த நஷ்டஈடு வலனப்படும். இதுதவிர ஏதேனும் நிவாரணம் அறிவிக்கப்பட்டடால் அரசு மூலமாக அந்த தொகையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.