கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள விமான விபத்தில் டிஜிட்டல் பிளைட் டேட்டா ரெக்கார்டர் மற்றும் வாய்ஸ் ரெக்கார்டர் என்று சொல்லப்படும் முக்கிய கருவிகள் ( கருப்பு பெட்டி ) கிடைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விமான போக்குவரத்து துறையின் இயக்குனர் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் விமான விபத்து நடைபெற்ற இடத்தில் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்த போது நேற்று இரவு நேரம் என்பதால் தேட முடியாத நிலையில் தற்போது முக்கியமான கருவிகளை தேடி எடுத்து இருக்கிறார்கள்.
டிஜிட்டல் பிளைட் டேட்டா ரெக்கார்டர் என்ற கருவிகள் நல்ல நிலமையில் இருப்பதாகவும், எந்த சேதாரமும் இல்லாமல் கிடைத்து விட்டதாகவும் அதனை வெட்டி எடுப்பதற்காக வேலை தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த கருவிகளை ஆய்வு செய்தால் விமானம் என்ன வேகத்தில் வந்து கொண்டிருந்தது ? விமானி என்ன தகவல்கள் தெரிவித்தார்? அவருக்கு எந்தவிதமான அறிவுரைகள் வழங்கப்பட்டது ?
விமானம் எந்த திசையில் இருந்து வந்தது? தரையிறங்க முற்பட்டபோது அதன் வேகம் என்னவாக இருந்தது ? தரையை தொடும் போது அழுத்தம் என்னவாக இருந்தது ? விமானத்தை நிறுத்துவதற்காக விமானிகள் முயற்சி செய்தபோது அந்த முயற்சியிலே வெற்றி கிடைக்கவில்லை ஏன் ? போன்ற பல்வேறு தகவல்கள் தெரியவரும். இந்த விபத்து நடந்தது என்பதைக் கண்டு பிடிப்பதற்காக பிரகாசமான வாய்ப்பு கிடைத்துள்ளது என கருதலாம்.