சென்னை விம்கோ நகர் வண்ணாரபேட்டை இடையிலான மெட்ரோ ரயில் பணிகள் நிறைவு பெற்றுள்ளது விரைவில் அங்கு வெள்ளோட்டம் நடத்தவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வண்ணாரப்பேட்டையில் இருந்து ஆலந்தூர் வரையிலான பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பாதையை விம்கோ நகர் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் அங்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கியது. வண்ணாரப்பேட்டையில் இருந்து தண்டீயார்பேட்டை வழியாக சுரங்கவழியாகவும் அங்கிருந்து பின் விம்கோ நகர் வரை உயர்மட்ட மேம்பாலம் மூலமும் பாதை அமைக்கப்பட்டது.
இந்த பணிகள் தற்போது முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. நிலையங்களை அமைக்கும் பணிகள் மட்டும் தற்போது நடைபெற்று வருகிறது. 9 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த பாதைகள் விரைவில் வெள்ளோட்டம் நடைபெறும் என்றும் அதைத் தொடர்ந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.