Categories
விளையாட்டு

“விம்பிள்டன் டென்னிஸ் போட்டி”… தோல்வியடைந்த கெர்பர், இஸ்னெர்…. வெளியான தகவல்….!!!!

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றாகிய விம்பிள்டன் டென்னிஸ் போட்டியானது லண்டன் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் 15வது வரிசையிலுள்ள கெர்பர் (ஜெர்மனி) அதிர்ச்சிகரமாக தோற்றார். 24 ஆம் நிலை வீராங்கனையான எலிஸ்மெர்டன்ஸ் (பெல்ஜியம்) 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் அவரை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற 3வது சுற்றுப்போட்டிகளில் 3-வது வரிசையில் உள்ள ஜபேர் (துனிசியா), கார்சியா (பிரான்ஸ்) போன்றோர் வெற்றி பெற்றனர்.

5 ஆம் நிலை வீராங்கனையான ஷக்காரி (கிரீஸ்) 3வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். பின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 5ஆம் நிலை வீரரான கார்லோஸ், அல்காரஸ் (ஸ்பெயின்) 3வது சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த ஆஸ்கர் ஒட்டேவை எதிர்கொண்டார். இவற்றில் அல்காரஸ் 6-3, 6-1, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று 4 வது சுற்றுக்கு முன்னேறினார். 20வது வரிசையிலுள்ள ஜான்இஸ்னெர் (அமெரிக்கா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக வெளியேறிவிட்டார்.

Categories

Tech |