Categories
உலக செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி… “இந்த நாடுகள் பங்கேற்க தடை”… எதெல்லாம் தெரியுமா…?

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடப்பு ஆண்டிற்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஜூலை 10ஆம் தேதி வரை விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறுகின்றது. இங்கிலாந்தில் நடைபெறும் இந்த போட்டியில் ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு விம்பிள்டன் போட்டியில் கலந்துகொள்ள தடை விதிப்பதாக டென்னிஸ் கிளப் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ரஷ்ய படைகளுக்கு உறுதுணையாக இருந்ததால் விளையாட்டு வீரர்களும் போட்டியில் பங்கேற்க தடை செய்யப்படுகிறது. இதன் மூலமாக உலகின் சிறந்த டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், 8வது இடத்தில் இருக்கும் ஆண்ட்ரி ரூப்ளேவ் போன்றோர் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே உலக கால்பந்து போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |