Categories
லைப் ஸ்டைல்

வியக்க வைக்கும் மருத்துவ குணம்கொண்ட மூலிகை தேநீர்…. இனிமே காலைல இத குடிங்க…!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி மூலிகை தேநீரில் நிறைந்துள்ள பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

துளசி இலை தேநீர்;
சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை தேநீர் ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

ஆவாரம் பூ தேனீர்:
காம்பு நீக்கிய ஆவாரம் பூக்களைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு மற்றும் வெல்லம் கலந்த ஆவாரம் பூ தேனீர் தயார். வாரம் ஒருமுறை இதை சாப்பிடலாம். இது உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கும்.

Categories

Tech |