Categories
Uncategorized மாநில செய்திகள்

வியப்பா இருக்கு…. மலைப்பா இருக்கு…. மகிழ்ச்சியா இருக்கு…. பார்த்ததும் செம குஷி மோடுக்கு சென்ற ஸ்டாலின்..!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, நீங்கள் அமைதியாக இருக்கின்ற காட்சியை பார்க்கும் போது இந்த கல்லூரியின் கட்டுப்பாடு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கி கொண்டிருக்கிறது. நீங்கள் பெற்ற அறிவு உங்களை மேலும் மேலும் உயர்த்தட்டும். நீங்கள் பெற்ற தன்னம்பிக்கை உங்களை தலை நிமிர வாழ வைக்கட்டும். கல்லூரியில் இருந்து விடைபெறுகிறீர்களே தவிர, கற்பதில் இருந்து விடை பெறவில்லை. அதைத்தான் பொன்முடி சொன்னார். படியுங்கள், மேலும் மேலும் படியுங்கள்.

பாடங்களை படிப்பவர்களாக மட்டுமில்லாமல்  பாடங்களை  உருவாக்கக் கூடியவர்களாக நீங்கள் திகழ வேண்டும். நீங்களே மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக ஆகுங்கள். இன்று இந்த நேரத்தில் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். ராணி மேரி கல்லூரியினுடைய 104வது பட்டமளிப்பு விழா இது. ராணி மேரி கல்லூரி என்பது இந்த பெயரை போலவே கம்பீரமான பாரம்பரியமான கௌரவத்தை கொண்டிருக்கக் கூடிய கல்லூரி. பேசிய கல்லூரி முதல்வரும் குறிப்பிட்டார். நம்முடைய அமைச்சர் அவர்களும் எடுத்துச் சொன்னார்.

1915 ஆம் ஆண்டு கேப்பர் இல்லம் என்ற அந்த பெயரில் புகழ்பெற்ற அந்த கட்டிடத்தில் இந்த ராணி மேரி கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முதலாக தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. தமிழகத்தைப் பொறுத்தவரை பார்த்தோம் என்றால் முதல் மகளிர் கல்லூரி எது என்றால் உங்கள் ராணி மேரி கல்லூரி தான். இது 104 ஆவது பட்டமளிப்பு விழா. இந்த நூறாண்டு காலத்தில் எத்தனை லட்சம் மகளிர் பட்டம் பெற்றிருப்பார்கள். எத்தனை தலைமுறைகளுக்கு கல்வி, அறிவை, ஆற்றலை, வேலை வாய்ப்பு, தன்னம்பிக்கையை, வாழ்க்கையை இந்த கல்லூரி உருவாக்கி இருக்கும் என்பதை கணக்கிட்டு பார்த்தால் வியப்பாக இருக்கிறது, மலைப்பாக இருக்கிறது, மகிழ்ச்சியாக இருக்கிறது என புகழ்ந்து பேசினார்.

Categories

Tech |