மோட்டார் சைக்கிள் விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜா அருகில் பெரியகுப்பம் பகுதியில் சபாபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெங்காய வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல் வியாபாரத்திற்கு முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வாலாஜாவில் இருக்கும் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சபாபதியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் சபாபதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சபாபதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாலஜா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.