Categories
சினிமா தமிழ் சினிமா

வியாபாரத்தைப் பெருக்க ஒற்றுமையாக களமிறங்கும் குடும்பம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புது திருப்பம்…!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய திருப்பம் நிகழவிருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். அண்ணன்- தம்பி பாசம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் குமரன், காவியா, சுஜிதா, ஸ்டாலின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் திடீரென ஒரு புது திருப்பம் நிகழவிருக்கிறது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையின் வியாபாரத்தை பெருக்க கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கு வீடு சென்று மளிகை பொருட்களை இலவசமாக டெலிவரி செய்யலாம் என குடும்பத்துடன் முடிவெடுக்கின்றனர் . மேலும் அண்ணன், தம்பிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து தெருவுக்கு தெரு போஸ்டர் ஒட்டி வரும் புரோமோ வெளியாகியுள்ளது.

Categories

Tech |