Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வியாபாரம் தொடங்க நினைத்த கணவர்…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

காதல் திருமணம் செய்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பாரதிதாசன் நகரில் நவீன் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ஹோட்டலில் சமையல்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நவீன்குமார் கவிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த நவீன் குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நவீன்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |