தமிழகத்தில் வியாபாரிகளிடம் வசூல் செய்யும் இயக்கம் அதிமுக அல்ல என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அதிமுக மற்றும் திமுக தேர்தல் பிரசாரத்தில் கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ராமநாதபுரம் பரமக்குடியில் முதல்வர் பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “வியாபாரிகளிடம் வசூல் செய்யும் இயக்கம் அதிமுக அல்ல. வியாபாரிகள் சுதந்திரமாக செயல்பட உறுதி செய்யும் அரசு அதிமுக அரசு. வியாபாரிகளின் மனதில் என்ன உள்ளது என்பதை தெரிந்து கொள்ளவே நேரில் சென்று சந்திக்கிறேன். நாட்டிலே ஒட்டுமொத்த மாநிலங்களில் தமிழகத்தில்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது” என்று முதலமைச்சர் சூளுரைத்துள்ளார்.