தேசிய பென்ஷன் திட்டம் வியாபாரிகளுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
தேசிய பென்ஷன் திட்டம் மனிதர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கு மத்திய அரசால் கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு வியாபாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சிறு வணிகர்கள், வியாபாரிகள் , சுயதொழில் செய்பவர்கள், இடைத்தரகர்கள் சிறுதொழில் செய்பவர்கள், உள்ளிட்ட அனைவர்களுக்கும் சமூகபாதுகாப்பு நலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த தேசிய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒன்றரை கோடி ரூபாய்க்கு மிகாமல் முதல் பெறுவோர் இதில் முதலீடு செய்துகொள்ளலாம்.மேலும் சில்லறை வணிகர், வியாபாரி அல்லது சுய வேலை செய்வோர் 18 முதல் 40 வயதுக்குட்பட்டவராக இருக்கவேண்டும். ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய்க்கு மிகாமல் முதல் இருக்க வேண்டும். மேலும் இதற்கு ஆதார் கார்டு, சேமிப்பு கணக்கு, ஜன் தன் கணக்கு ஆகியவை இருந்தாலே போதுமானதாகும். இத்திட்டத்தில் முதலீடு செய்ய அருகில் இருக்கும் பொது சேவை மையத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.