Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வியாபாரிகளுக்கு இலவச முகக்கசவம் வழங்கிய போலீசார் – பேனர் வைத்து கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்….!!

முகக் கவசம் அணியாமல் மீன் வியாபாரிகளுக்கு கடலூர் மாவட்ட காவல்துறையினர் இலவச முகக்கவசம் வழங்கியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டிகந்தன்பாளையத்தில் மீன் விற்பனை செய்யும் வியாபாரிகள் பெரும்பாலானோர் முக கவசம் அணிவது இல்லை. எனக் கூறப்படுகிறது போலீசார் பல முறை அறிவுறுத்தியும் வியாபாரிகள் முக கவசம் அணியாமல் மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து முககவசம் அணிவதற்கான அவசியம் குறித்து அப்பகுதியில் பேனர் வைத்த போலீசார் வியாபாரிகளுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கினர்.

அதன்பின் காவல் துறையினர் பேசுகையில் “மற்றவர்களுக்கு பயந்து நீங்கள் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உயிருக்கு பயந்து முககவசத்தை அணியுங்கள். உங்களை நம்பி உங்களிடம் பொருள் வாங்குவதற்கு பொதுமக்கள் வரவேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், உங்களை தேடி வரும் மக்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் முககவசம் அணியுங்கள்” என கூறியுள்ளார்.

Categories

Tech |