Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீங்க ஏன் முன்னாடியே தெரிவிக்கல்ல…. சந்தை நடத்தக் கூடாது…. சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக சந்தை நடத்தகூடாது என்று சொன்னதால் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் .

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி – பேராவூரணி சாலையில் செவ்வாய் சந்தை நடைபெற்றுள்ளது. அப்போது சந்தையில் அதிகமாக கூட்டம் கூட கூடாது, இதனால் தொற்று பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றும் இதனால் வியாபாரம் செய்ய வேண்டாம் என நகராட்சி நிர்வாகத்தினர் வியாபாரிகளிடம் கூறியுள்ளனர்.

இதற்கு வியாபாரிகள் எங்களுக்கு முன்னதாக ஏதும் தகவல் சொல்லவில்லை நாங்கள் வியாபாரம் செய்வதற்கு பொருட்கள் எல்லாம் சந்தைக்குக் கொண்டு வந்து விட்டதால் எங்களை வியாபாரம் செய்ய விடுங்கள் என வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் ஆணையர் பேச்சு வார்த்தை நடத்திய பின்பு அங்கிருந்து வியாபாரிகள் கலைந்து சென்று வழக்கம் போல் வியாபாரத்தை தொடர்ந்துள்ளனர்.

Categories

Tech |