வியாபாரியை அரிவாளால் வெட்டி விட்டு கவரிங் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அசோக்குமார் (25) என்பவர் ஆவடி எடுத்த கவுரி பேட்டையில் வசித்துக் கொண்டிருக்கிறார். ஆவடி கோவில் பதாகை மசூதிக்கு பின்புறம் கவரிங் நகை வைத்திருக்கின்றார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த மூன்று பேர் திடீரென அசோக்குமார் தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு கடையில் இருந்த கவரிங் நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அசோக் குமார் தலையில் 9 தையல் போடப்பட்டுள்ளது. இது பற்றி ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த விஜய் (24), அருண்குமார் (25), பட்டாபிராம் பாபு நகரை சேர்ந்த சரத்குமார் (23) போன்ற மூன்று பேரை கைது செய்துள்ளனர்.