Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வியாபாரி கொலை வழக்கு… ஊராட்சி மன்ற தலைவர் அதிரடி கைது… போலீஸ் அதிரடி.!!!!!!

செங்குன்றத்தை அடுத்த அமலாதி ஊராட்சிக்குட்பட்ட எடப்பாளையம் எம்.ஜி.ஆர் தெருவில் வசித்து வந்த முரளி என்பவர் கடந்த அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி  கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் அலமாதி சாந்தி நகரை சேர்ந்த திலீபன் (25), நவீன் (24), தீபன் (41), ஆறுமுகம் (60) ஆகிய  4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் முரளியின் உறவினர்கள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் அவரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தை அறிந்த தமிழ்வாணன் தற்போது தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் துணை கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் சோழவரம் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  நேற்று அமலாதியில் பதுங்கி இருந்த தமிழ்வாணனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |