தூத்துக்குடி அருகே கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தார் அருகே இருக்கும் மஞ்சநம்பகிணறு கிராமத்தைச் சேர்ந்த பூ வியாபாரி அழகுதுரை என்பவர் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக மது குடிக்கும் இடத்தில் உறவினர் ஒருவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை பார் உரிமையாளர் உள்ளிடோர் கண்டித்துள்ளர்கள்கள். இதனால் அவருக்கும் உரிமையாளர் தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டது. இதை அடுத்து அழகுதுரை வீட்டிற்குச் சென்று இருக்கின்றார். அன்று இரவு அவர் வீட்டிற்குச் சென்ற ஏழு பேர் கொண்ட கும்பல் தகராறில் ஈடுபட்டு பின் அவரை வீட்டிலிருந்து வலுகாட்டாயமாக வெளியே அழைத்து வந்து சரமாரியாக அறிவாளால் வெட்டியுள்ளார்கள்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். பின் அந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி ஸ்டாலின், கனகராஜ், பட்டு ராஜா, பாலமுருகன், பாலபாண்டி உள்ளிட்ட ஐந்து பேரை நேற்று முன்தினம் கைது செய்தார்கள். அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது, டாஸ்மாக் பாரில் தகராறு செய்த அழகு துறையின் வீட்டிற்கு சென்று அவரை வெளியே வரவழைத்து பேசினோம். ஆனால் அவருக்கும் எங்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அவரை அறிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து விட்டோம் என கூறியுள்ளார்கள். இவ்வழக்கில் தலைமறைவாக இருக்கும் நாகராஜ் மற்றும் பார் உரிமையாளர் மாடசாமி உள்ளிட்டோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள்.