வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள மேலபட்டமுடையார் புரம் ராமர் கோவில் தெருவில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடைகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த 5-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கணேசன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கணேசன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.