பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்கு அருகில் பகுதியில் வியாபாரியான முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 20-ஆம் தேதி முத்துராமலிங்கத்தின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் 15 பவுன் தங்க நகை, 77 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து முத்துராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் ஒடிசாவை சேர்ந்த பத்மலோஜன் பாண்டே என்பவர் முத்துராமலிங்கத்தின் வீட்டில் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பத்மலோஜனை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த நகைகளை மீட்டனர்.