ராமேஸ்வரத்திலிருந்து வந்த பேருந்து விபத்துக்குள்ளானது.
மதுரை மாவட்டத்தில் உள்ள விரகனூர் அருகே ராமேஸ்வரத்தில் இருந்து தனியார் பேருந்து வந்து கொண்டு இருந்தது. அப்பொழுது திடீரென பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் சிறிய காயங்களுடன் தப்பினார்கள். இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஓடிவந்து பஸ்ஸில் இருந்தவர்களை மீட்டார்கள். தற்போது காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.