கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் வசிப்பவர் வர்ஷா(25). இவர் மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வர்ஷா ஐஸ்கிரீமில் எலி மருந்து கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் மயக்கமடைந்த அவர் தன்னுடைய படுக்கை அறைக்கு சென்றுள்ளார். பின்னர் மீதி ஐஸ் கிரீமை அப்படியே வைத்து விட்டு சென்றுள்ளார். இதைப் பார்த்த அவருடைய ஐந்து வயது மகன் அதை எடுத்து சாப்பிட்டுள்ளார். இதையடுத்து வர்ஷாவின் தங்கையும் இதை எடுத்து சாப்பிட்டுள்ளார் .
இதையடுத்து இருவரும் பிரியாணி சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்று உள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் திடீரென வர்ஷாவின் மகன் வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் சேர்த்த போது வர்ஷாவின் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் வர்ஷாவின் தங்கையும் உயிரிழந்துள்ளார். இதுகுறித்த காவல்துறை நடத்திய விசாரணையில் வர்ஷா உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.