Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விரட்டி கடித்த விஷ வண்டுகள்…. 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்…. கடலூரில் பரபரப்பு…!!

விஷ வண்டுகள் கடித்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள சேத்தியாத்தோப்பு அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மாலை பள்ளி மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த விஷ வண்டுகள் மாணவர்களை விரட்டி விரட்டி கடித்தது.

இதனால் காயமடைந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |