வெறி நாய் கடித்ததால் 30 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக பயணிகள் காத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த புதரில் இருந்து ஓடி வந்த வெறி நாய் பயணிகளை கடித்ததால் அவர்கள் அலரியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் வெறிநாய் அவர்களை துரத்தி சென்று கடித்ததால் சாமிகண்ணு(70), அஞ்சலம்மாள்(70), சஞ்சய்(9), நிகாஷ்(14) ஆகியோர் காயமடைந்தனர்.
இதனை அடுத்து தெருத்தெருவாக ஓடிய வெறிநாய் ராஜேந்திரன்(59), அலமேலு(40), மேகராஜன்(55) என மொத்தம் 30 பேரை கடித்தது. இதனால் காயமடைந்த 30 பேரும் விருதாச்சலம் அரசு மருத்துவமனையிலும், கருவேப்பிலங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்கிடையே கிராமமக்கள் ஒன்று திரண்டு தெருநாயை விரட்டி அடித்தனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தினர் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.