Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விரட்டி விரட்டி தாக்கிய காகங்கள்…. ஆந்தையை மீட்ட மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!

ஆந்தையை காப்பாற்றிய மாணவியை  பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் பாராட்டியுள்ளனர்.

கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் கோட்டூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு உப்புத்தண்ணீர் கிணறு உள்ளது. இதனருகில் சிறுவர், சிறுமிகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆந்தை ஒன்று அந்த கிணற்றை சுற்றி திரிந்துள்ளது. இதனையடுத்து  அந்த ஆந்தையை சில காகங்கள் ஒன்று சேர்ந்து விரட்டி தாக்கியுள்ளது.

அங்கு விளையாடிக் கொண்டிருந்த பிரியதர்ஷினி என்ற மாணவி இதை பார்த்துள்ளார். உடனே அந்த காகங்களை அங்கிருந்து விரட்டிவிட்டு  ஆந்தையை பத்திரமாக காப்பாற்றியுள்ளார். இதுகுறித்து ஆழியார் வனத்துறையிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அலுவலர்களிடம் பிரியதர்ஷினி  ஆந்தையை  ஒப்படைத்துள்ளார். அதன் பிறகு  ஆந்தையை காப்பாற்றிய மாணவிக்கு கிராம மக்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் வாழ்த்துக்களை  கூறியுள்ளனர்.

Categories

Tech |