உத்தரபிரதேசம் மாநிலம் ஹர்தோய் மாவட்டத்திலுள்ள ஆசாத்நகர் பகுதியில், மோனி குப்தா என்ற பெண் தன் கணவன் மனோஜ் நீண்ட ஆயுளுடன் இருக்கவேண்டி “கர்வா சவுத்” விரதம் இருந்தார். அதே நேரம் இவர்களுக்கு திருமணமாகி 22 வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும், மனோஜ் தன் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ‘கர்வா சவுத்” பண்டிகையின்போது வீட்டிற்கு வந்த மனோஜ், தன் மனைவி மோனி குப்தாவை கத்தியால் சரமாரியாக குத்தி இருக்கிறார். இதையடுத்து மோனியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்ப்பதற்குள், மனோஜ் அங்கி இருந்து தப்பி ஓடியுள்ளார். அதன்பின் மீட்கப்பட்ட மோனி குப்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் தலைமறைவான கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.