விரல்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் நம் உடலில் எந்தெந்த நோய்கள் குணமாகும் என்பதை குறித்து இதில் பார்ப்போம்.
நம் உடம்புக்கும் நம் கை விரல்களுக்கும் பல சம்பந்தம் உண்டு. நம் கை விரல்களுக்கு சில பயிற்சிகளை நாம் அளிப்பதன் மூலம் உடலிலுள்ள சில நோய்கள் குணமாகும் தெரியுமா? அப்படி கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிரவிரல், சிறுவிரல், உள்ளங்கை என உங்கள் கைகளுக்கு என்ன பயிற்சி கொடுத்தால் என்ன நோய் குணமாகும் என்பதை தான் இதில் பார்க்க போகிறோம்.
கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்தால் மன அழுத்தம், மனநிலையை கட்டுப்படுத்த முடியும். உறக்கம் நன்றாக வரும் .
ஆள்காட்டிவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்பவர்களுக்கு, உடல் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்கக்கூடிய தன்மை உள்ளது.
நடு விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி கொடுத்தால் கோபத்தை குறைக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலியை குறைக்க உதவும்.
கட்டை விரலுடன் ஒத்துப்போவது மோதிர விரல். மோதிர விரலில் அழுத்தம் கொடுத்து பயிற்சி கொடுத்தால் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைத்து நல்வழிப்படுத்தும்.
சிறு விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி கொடுத்தால் இதயம் மற்றும் ரத்த ஓட்டத்துக்கு மிகவும் நல்லது. ரத்த ஓட்டத்தை சீராக்கி உடல் பாகங்களின் செயல்திறனை அதிகரிக்கும்.
உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி கொடுத்தால் மன அழுத்தம் என்ற கொடிய நோய் நம்மை விட்டு விலகும். ஒட்டுமொத்தமாக மனதையும் உடலையும் சீராக வைத்திருக்கும்.