Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

விராட் கோலியின்… “மகளுக்கு பாலியல் மிரட்டல்”… சாப்ட்வேர் இன்ஜினியரை தூக்கிய போலீஸ்.!!

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மகளுக்கு ஆன்லைன் வழியே பாலியல் மிரட்டல் விடுத்த ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்…

டி20 உலக கோப்பை தொடரில் தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.. இது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.. இதனால் இந்திய அணியை பலரும் விமர்சனம் செய்தனர்.. அதில், குறிப்பாக இந்திய அணி தோல்விக்கு காரணம் முகமது ஷமி தான் என்று அவருக்கு எதிராக சமூக வலை தளங்களில் சிலர் எதிர்ப்பை பதிவு செய்தனர்..

இதையடுத்து முகமது ஷமிக்கு ஆதரவாக விராட் கோலி அறிக்கை விடுத்திருந்தார்.. ஷமிக்கு ஆதரவளித்த நிலையில், ஒருவன் விராட் கோலியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தான்.. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது..

இதனையடுத்து போலி கணக்கு மூலம் பாலியல் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், விராட் கோலியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ஐதராபாத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ராம்நாகேஷ் (23) என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர்..

Categories

Tech |