இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இளம் வீரர்களுக்கு தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டில் ஐபிஎல் போட்டியானது மிக புகழ் பெற்றது. இந்த ஐபிஎல் போட்டியில் பல்வேறு நாடுகளை சார்ந்த வீரர்களும் பங்கு பெறுவர். சென்னையில் ஒரு சில தினங்களுக்கு முன்பு ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் தொடங்கப்பட்டது. அதில் அணியின் உரிமையாளர்கள் பல்வேறு வீரர்களை ஏலம் எடுத்தனர்.
இதில் பல்வேறு வீரர்கள் குறிப்பாக ஆல்ரவுண்டர் மற்றும் பந்து வீச்சு வீரர்களை தேர்ந்தெடுக்க அங்கிருந்த அணிகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதுவரை நடந்த அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் ஒருமுறைகூட கோப்பை வெல்லாத பெங்களூர் அணி இம்முறை கோப்பையை வெல்லும் நோக்கில் சிறந்த வீரர்களை அதிக விலைக்கு ஏலம் எடுத்தது.
அதிலும் குறிப்பாக மெக்ஸ்வெல், ஜெமிஷன் வீரர்களை தேர்ந்தெடுத்தனர். இதுபோல தற்சமயத்தில் நடந்த சையது முஷ்டாக் அலி தொடரில் கேரளாவில் விளையாடிய இளம் வீரரான முகமது அசாருதீன் பெங்களூர் அணிக்காக ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சையது முஷ்டாக் அலி தொடரில் மும்பைக்கு எதிராக விளையாடிய போட்டியில் 54 பந்துகளில் 137 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடினார். பெங்களூர் அணியில் அசாருதீன் தேர்வானது மகிழ்ச்சி அளிப்பதாக பெங்களூர் அணியின் கேப்டனான விராட் கோலி கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் ஏலம் எடுத்த இரண்டு நிமிடத்திற்குள் அசாருதீன் செல்போனில் மெசேஜ் செய்து ‘ஆர்சிபி அணிக்கு உங்களை வரவேற்கிறோம், சிறப்பாக விளையாடுங்கள்’ என்று அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார். இதுபற்றி அசாருதீன் கூறும்போது, இந்த மெசேஜை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் , இது எனக்கு கனவுபோல இருந்தது என்று கூறினார். விராட் கோலி எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்றும் , அவரது அணியில் இடம் பெற்றுள்ளது எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி நிச்சயம் என்று காட்டுவேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்