தேர்வுக்குழு மீட்டிங்கில் விராட் கோலியின் பலவீனங்களை குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்றுவிட்டு, பின் டி20 தொடரின் போது ஓய்வுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் தென்னாப்பிரிக்கா தொடரில் புத்துணர்ச்சியுடன் விளையாடி சதம் அடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரால் அரை சதங்களை மட்டும் எடுக்க முடிந்த நிலையில், பவுன்சர் மற்றும் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சற்று தடுமாறி உள்ளார்.
இவ்வாறாக டி20 கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2வது போட்டியில் விளையாடிய போது கூட, பவர் பிளேவில் 14 பந்துகளில் 23 ரன்கள் விராட் கோலி அடித்துள்ளார். இதனை அடுத்து மிடில் ஓவர்களில் 27 பந்துகளில் 29 ரன்களை மட்டுமே சேர்த்தார். இப்படி விராட்கோலி ஸ்பின்னருக்கு எதிராக தடுமாறுவது மிகப்பெரும் பிரச்சனையாக தான் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து இரண்டாவது போட்டி முடிந்த பின் நடந்த மீட்டிங்கில் பேசப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இப்பிரச்சனை குறித்து பதிலளித்த விராட் கோலி, பயோ பபுள் வந்த பின்புதான் முன்புபோல் விளையாட முடியவில்லை என்றும் கேப்டன் பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு அழுத்தம் ஏற்பட்டது. மேலும் ஓய்வு அதிகம் இல்லாததும் ஒரு காரணம் என தெரிவித்தார். உடனே இதுபற்றி தேர்வு குழுவினர் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி விராட் கோலிக்கு 10 நாட்கள் விடுப்பு வழங்கியுள்ளனர்.
ஆனால் மீண்டும் ஸ்பின்னர்களுக்கு எதிராக சொதப்பும் பட்சத்தில் வீரர்களை அணியில் இருந்து ஓரங்கட்டப்படும் வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் கடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி படுமோசமாக சொதப்பி லீக் சுற்றுடன் மட்டும் வெளியேறி உள்ளது. ஆனால் இந்த முறை அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ள உலக கோப்பையை கட்டாயம் வெல்லும் நிலை உள்ளது. இதனைத் தொடர்ந்து பிசிசிஐ பார்ம் அவுட்டில் இருக்கும் வீரர்களை நீக்குவதற்கு எவ்வித பாரபட்சமும் பார்க்காது என தகவல் வெளியாகியுள்ளது.