ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கே.எல் ராகுல் தான் தொடக்க ஆட்டக்காரர் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நாளை (செப்டம்பர் 20 ஆம் தேதி) இரவு 7: 30 மணிக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது.. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சிகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில் கேப்டன் ரோஹித் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் ஓப்பனிங் இறங்கி விராட் கோலி சதம் விளாசியதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. இதனைத்தொடர்ந்து தொடக்க வீரர் வரிசை பற்றி நானும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் ஆலோசனை செய்தோம்.
அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு இன்னிங்ஸைத் தொடங்குவதற்கான விருப்பங்களில் விராட் கோலியும் ஒருவராக இருக்கிறார்.ஆனால், கே.எல். ராகுல் தான் தொடக்க ஆட்டக்காரர். ஒரு தொடக்க ஆட்டக்காரராக ராகுலின் பங்களிப்பு சில நேரங்களில் கவனிக்கப்படாமல் போகிறது, மேலும் அவருக்கு கேப்டனின் முழு ஆதரவு உள்ளது என்றார்.
மேலும் விராட் கோலி எங்கள் மூன்றாவது தொடக்க வீரர், அவர் சில ஆட்டங்களில் ஓபன் செய்ய வேண்டும், ஆனால் டி20 உலகக் கோப்பையில் கே எல் ராகுல் எங்களுக்காக ஓபன் செய்வார். ராகுலின் ஆட்டங்கள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும். அவர் எங்களுக்கு மிகவும் முக்கியமான வீரர்” என்று கூறினார்.
சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஆசிய கோப்பை 2022 இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விராட் தனது முதல் டி20 சதத்தை விளாசிய பிறகு, ராகுல் ஒரு மோசமான பார்மில் இருந்ததால், அவர் போட்டியில் ரன்களை எடுக்க முடியாமல் போனதால், ரசிகர்களும் நிபுணர்களும் கோலியை தொடக்க ஆட்டக்காரராக இறக்கினால் சிறப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர்.
அதேசமயம் முன்னதாக, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், ராகுல் மற்றும் ரோஹித் இரண்டு உறுதியான தொடக்க வீரர்கள் என்றும், இந்த கூட்டணி தொடர வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஒரு பேக்-அப் ஓப்பனராக மட்டுமே விராட் கோலி ஆடினார்.. அவர் (கோஹ்லி) ஓப்பனிங்கில் பேட்டிங்கைத் தொடங்குவது பற்றிய முட்டாள்தனத்தைத் தொடங்க வேண்டாம். அவரால் கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மாவுடன் ஓப்பனிங் ஆட கூடாது. ஆடவும் முடியாது… நம்பர் 3 பற்றி நான் எப்போதும் நெகிழ்ச்சியுடன் இருப்பேன். 10வது ஓவர் வரை ஓப்பனர்கள் ஆட்டமிழக்காமல் பேட் செய்திருந்தால் சூர்யகுமார் யாதவ் தான் 3ஆவதாக இறங்க வேண்டும். ஆனால் ஆரம்பத்தில் விக்கெட் விழுந்தால் கோஹ்லி 3ஆவதாக இறங்குவார். கோலி எங்கிருந்து வேண்டுமானாலும் ஆட்டத்தை சரியாக எடுத்து செல்லக்கூடியவர் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கூறியது குறிப்பிடத்தக்கது..
Captain @ImRo45 addressing the press conference ahead of #INDvAUS series. pic.twitter.com/0i8tmstoUf
— BCCI (@BCCI) September 18, 2022