Categories
கிரிக்கெட் விளையாட்டு

“விராட்-ரோஹித்” எதற்காக அப்படி செய்தார்கள்…..? கவாஸ்கர் கடும் அதிருப்தி…..!!!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியாவும்-பாகிஸ்தான் அணிகளும் மோதியது. இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த மேட்சில் விராட் மற்றும் ரோகித் செய்த ஒரு சிறிய தவறால் அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்து விட்டனர். இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது ராகுல் ஒரே ஒரு பந்தை மட்டும் எதிர்கொண்டதால் எதையுமே நம்மால் தீர்மானிக்க முடியாது. விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் பேட்டிங் செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. இவர்களால் கணிசமான அளவிற்குதான் ரன்களைப் பெற முடிந்தது.

இதற்கு முந்தைய போட்டிகளில் விராட் கோலி ஃபார்மில் இல்லை என்று கூறினார்கள். இதனால் விராட் கோலிக்கு நான் அதிர்ஷ்டம் இல்லை என்று பலமுறை கூறிக் கொண்டே இருந்தேன். ஆனால் நேற்று நடைபெற்ற மேட்சை விராட் கோலிக்கு அதிர்ஷ்டம் இருந்தது. அவருடைய கேட்ச் தவறியது. இன்சைட் எட்ஜ்கள் வந்த போதும் சிறப்பாக ஆடினார். இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா 2 பேருமே தங்களுக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி 60 முதல் 70 ரன்கள் பெற்றிருக்கலாம். ஆனால் மோசமான சாட்களால் சொதப்பிவிட்டனர்.

அதுபோன்ற சூழ்நிலைகளில் பெரிய ஷாட்கள் அடிக்க வேண்டிய தேவையே கிடையாது. 19-20 ரன்கள் தேவைப்பட்டிருந்தால் சிக்சர் அடிக்கலாம். ஆனால் குறைந்த அளவு ரன் ரேட் இருக்கும் போது அப்படி செய்யக்கூடாது. அவர்கள் 70 அல்லது 60 ரன்கள் அடித்திருந்தால் ஒருவேளை சிக்ஸருக்கு சென்றிருக்கலாம். இனி வரக்கூடிய போட்டிகளிலாவது விராட் கோலி மற்றும் ரோகித் ஆகிய 2 பேரும் இதைக் கற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன் என்றார்.

Categories

Tech |