நடிகை நிவேதா பெத்துராஜ் விராட பருவம் படத்தில் நக்சலைட்டாக நடித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதைத்தொடர்ந்து இவர் டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தற்போது இவர் பார்டி, பொன்மாணிக்கவேல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் நிவேதா பெத்துராஜ் தெலுங்கு ஹீரோக்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் வேணு உடுகுலா இயக்கத்தில் உருவாகியுள்ள விராட பருவம் படத்தில் நிவேதா பெத்துராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராணா கதாநாயகனாகவும், சாய்பல்லவி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் விராட பருவம் படத்தில் நிவேதா பெத்துராஜ் நக்சலைட் வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.