Categories
தேசிய செய்திகள்

விரிவான சுகாதார கட்டமைப்பு திட்டம் – மத்திய அரசு அறிவிப்பு…!!

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்புற சுகாதார மையங்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டு வலுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார்.

மேலும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு 140 கோடி மிச்சமாகும். பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் கொரோனாவால் மிகப் பெரும் சேதத்தை சந்தித்திருக்க நேர்ந்திருக்கும். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கொரோனா காலத்தில் பணியாற்றிய முன் களப் பணியாளர்களுக்கு நன்றி” என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து மத்திய பட்ஜெட் ஒவொன்றாக வாசிக்க தொடங்கியுள்ளார்.

அதில், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்புற சுகாதார மையங்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டு வலுப்படுத்தப்படும். மேலும் தேசிய நோய்கள் தடுப்பு மையத்தை வலுப்படுத்தும் வகையில் 12 மத்திய நிறுவனங்கள் அமைக்கப்படும். அனைத்து மாநிலங்களுக்கும் சுகாதார தகவல் அமைப்பு அமைக்கப்பட்டு அனைத்து மருத்துவ சோதனை மையங்கள் உள்ளிட்டவை இணைக்கப்படும்.

Categories

Tech |