போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிலி நாட்டில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இலவச போக்குவரத்து சேவை, தொழில்நுட்ப உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம், விரிவான பாலியல் கல்வி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சாண்டியாகோ நகரில் மாணவர்கள் திடீரென போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களிடம் காவல்துறையினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் மாணவர்கள் கேட்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் மாணவர்களின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் அங்கிருந்து கலைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.