Categories
மாநில செய்திகள்

விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணை….. “போலி பத்திரபதிவு ரத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின்”….. நடிகை வாணிஸ்ரீயின் ரூ 20 கோடி மதிப்பிலான நிலம் ஒப்படைப்பு..!!

போலி பத்திரபதிவால் அமைந்த கரையில் உள்ள நிலத்தை இழந்த பலம் பெரும் நடிகை வாணிஸ்ரீக்கு நிலத்தை ஒப்படைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. 

பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சிறப்பு பயிலகங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார். அது மட்டுமின்றி மேலும் பத்திரபதிவு துறையில் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்யும் சட்டத்தினையும் நடைமுறைக்கு கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின்.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பாக 1,024 பேருக்கு இந்த பேராசிரியர்களுக்கு தேர்வு நடத்தி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பணிநியமன ஆணைகளை 11 பேருக்கு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். அடுத்ததாக பத்திர பதிவு துறையில் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்து அந்த சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் நிலத்தை கொடுக்க கூடிய சட்ட திருத்தம் அண்மையில் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

அங்கு சட்டத்தின் மீது குடியரசு தலைவர் ஒப்புதல் கொடுத்ததால் கடந்த காலங்களில் நில அபகரிப்பாளர்களால் மோசடியாக பதிவு செய்யப்பட்ட சொத்துக்களை இழந்த உண்மையான உரிமையாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் சட்டமான இந்த 1908ன் சட்டத்தை திருத்தி போலி ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரம் பதிவு துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடங்கி வைக்கும் விதமாக 5 பேருக்கு இந்த மோசடியாக பதிவு செய்யப்பட்டு உண்மையான உரிமையாளர்களுக்கு வழங்கி வருகின்றார்கள்.

மேலும் வசந்த மாளிகை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த பலம்பெரும் நடிகை வாணி ஸ்ரீயின் சென்னை அமைந்தகரையில் உள்ள 20 கோடி ரூபாய் சொத்தை போலியான ஆவணம் தயாரித்து ஒரு சில மோசடி கும்பல் வைத்திருந்தது.. இந்த 20 கோடி மதிப்பிலான சொத்தை புதிய சட்டம் மூலம் மீட்டு நடிகை வாணிஸ்ரீ இடம் வழங்கினார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.. தற்போது இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்ததால் போலியாக பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள் உரிமையாளர்களிடமே வழங்கப்பட்டு வருகிறது.

இதில் தலைமை செயலர் இறையன்பு, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பத்திரப்பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி, பத்திரப்பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் ஆகியோர் பங்கேற்றனர்.

 

Categories

Tech |