விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று ஆசைகள் நிறைவேறும் நாளாகவே இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகையும் உண்டாகும். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கையில் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு உரிய சம்பவமொன்று ஏற்படும். இன்று பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாகவே இருக்கும். யாரிடமும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். மனக்கவலை அவ்வப்போது வந்து செல்லும் முயற்சிகளில் தடை ஏற்படலாம்.
எதிலும் எச்சரிக்கையாக செயல்படுங்கள், புதிய முயற்சிகளை மற்றும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எதிர்பாராத வகையில் முன்னேற்றம் இருக்கும். கூடுமானவரை மாணவர்கள் கொஞ்சம் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. படிப்பதற்கு முன்பு இரண்டு நிமிடம் தியானம் மேற்கொள்வது ரொம்ப சிறப்பு. மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். மனம் அமைதியாக இருந்தாலே கல்வியில் நீங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற முடியும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் சிவப்பு நிறம்