விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று எல்லாவற்றுக்கும் உங்களுடைய அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை நீங்கள் பரிபூரணமாக உணர்வீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். கடின உழைப்பால் முன்னேறும் நாளாகவே இருக்கும், இன்று நண்பர்களுடன் மனத்தாங்கல் அவ்வப்போது வந்து செல்லும். யாருக்கும் சாட்சி கையெழுத்து மட்டும் போட வேண்டாம்.
யாருக்கும் எந்தவித வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம், யாருக்கும் எந்தவித பஞ்சாயத்துகளும் செய்ய வேண்டாம். இன்றைய நாள் முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள் ஓரளவு சிறப்பை கொடுக்கும். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
அதுமட்டுமில்லாமல் இன்று பொறுமையை மட்டும் கடைபிடியுங்கள், அது போதும். யாரிடமும் எந்தவித வாக்குவாதங்களும் செய்யாதீர்கள். கோபப்படாதீர்கள். இன்று திருமண முயற்சிகளை மேற்கொள்ளுங்கள், ஓரளவு சிறப்பை கொடுப்பதாகவே அமையும். இன்று கொடுக்கல் வாங்கல்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும்.
கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். அது மட்டுமில்லை இன்று சிவராத்திரி என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். இன்று அதே போலவே ஏழு நபர்களுக்கு முடிந்தால் தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்