விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று மதி நுட்பத்தால் மகத்தான காரியம் ஒன்றை செய்து முடிக்கும் நாளாகவே இருக்கும். வீட்டிற்கு தேவையான வீட்டின் தேவையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வாகனத்தில் செல்லும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனமாகவே செல்லவேண்டும். வாகனத்தை மாற்றலாமா என்ற சிந்தனையும் உங்களுக்கு உருவாகும். வரவு ஓரளவே சிறப்பை கொடுக்கும். இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், கொஞ்சம் திட்டமிட்டபடி காரியத்தைச் செய்யுங்கள். ஓரளவு வெற்றியை இறுக்கிப் பிடிக்க முடியும்.
வியாபாரம் ஓரளவு குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கொஞ்சம் கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகளும் வந்து சேரும். இன்று உழைப்பு கூடும் நாள் என்று சொல்லலாம். யாரிடமும் கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம், யாருக்கும் எந்தவித வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். மிக முக்கியமாக பஞ்சாயத்துகளில் கலந்து கொள்ள வேண்டாம், பஞ்சாயத்து பண்ணுகிறேன் என்று எந்தவித பிரச்சினையும் நீங்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாகவே இருங்கள்.
இன்று மாணவச் செல்வங்கள் கடினமாக உழைத்து தான் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். படித்த பாடத்தை எழுதி பார்ப்பது ரொம்ப நல்லது. தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் படித்ததை ஒருமுறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். அதுபோலவே தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் காரமான உணவுகளை கொஞ்சம் தவிர்த்துவிடுங்கள். பழ வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இரவில் தூங்க செல்வதற்கு முன் பால் அருந்துவது ரொம்ப நல்லது. உங்களுடைய மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள், வெற்றிபெறலாம்.
மனம் அமைதியாக இருப்பதற்கு இரண்டு நிமிடம் தியானம் மேற்கொண்டு பாடங்களைப் படியுங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: வடக்கு
அதிஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்