Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு.. கோபத்தை குறைப்பது நன்மையை கொடுக்கும்.. சிந்தித்து செயல்படுங்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குறுதிக்கு மாறாக சிலர் செயல்படலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக அளவிலேயே இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திக்கக்கூடும். பெண்கள் உடல் நிலையில் அக்கறை கொள்வார்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கம் வேண்டாம். இன்று  வீண் அலைச்சல் கொஞ்சம் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நன்மையை கொடுக்கும். சிலருக்கு நினைத்தவரையே கை பிடிக்க கூடிய யோகம் இன்று ஏற்படும். எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது ரொம்ப நல்லது.

தொழில் வியாபார ரீதியாக இருந்து வந்த கடந்த கால பிரச்சனைகள் விலகி நல்ல லாபத்தையும் ஏற்றத்தையும் ஓரளவு பெறுவீர்கள். இன்று மாணவர்களும் பொதுமக்களும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது. வைரஸ் தொற்றின் காரணமாக இந்திய அரசாங்கத்தால் சொல்லப்படுகின்ற ஒவ்வொரு விஷயத்தையும் நாம் அலட்சியம் காட்டாமல் பின்பற்றவேண்டும். உலக நாடுகளில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உயிரிழப்பிற்கு காரணமே அந்த நாட்டு மக்கள் கொண்ட அலட்சிய போக்கு தான்.

தயவுசெய்து இவர்களிடம் இருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டு அலட்சியம் காட்டாமல் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நாம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு நாம் தான் ஒத்துழைக்க வேண்டும். தயவு செய்து நாம் இந்த விஷயத்தில் எந்த வித அலட்சியம் காட்டாமல் முழு ஒத்துழைப்பும் கொடுத்து, வைரஸை முற்றிலும் ஒழித்திட கண்டிப்பாக நாம் பாடுபடுவோம்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை நிறம்

Categories

Tech |