விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவுகளில் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழல் அமையும். மனைவி, மக்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். தொழில் முதலீடுகளை குறைப்பது நல்லது. இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இடைவெளி காணப்படும், எந்த ஒரு பிரச்சனையும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகள் புத்தி சாதுர்யமாக நடந்து கொள்வது மகிழ்ச்சியை கொடுக்கும்.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித தடையும் இல்லாமல், சிரமமும் இல்லாமல் முன்னேற்றமான சூழல் இருக்கும். தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண் எடுக்கக்கூடிய சூழலும் இருக்கும். அதே போல தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் உங்களுடைய மனநிலையை நீங்கள் அமைதியாக வைத்துக் கொண்டாலே போதும், வெற்றி பெற்றுவிடலாம். இரண்டு நிமிடம் இருந்துவிட்டு பின்னர் பாடங்களைப் படியுங்கள், ரொம்ப சிறப்பாகவே இருக்கும். அதே போல தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் காரமான உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்து விட்டு, பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
இரவில் தூங்கச் செல்வதற்கு முன் பால் அருந்தி விட்டுச் செல்வது,. படித்த பாடத்தை நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்