விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று சில நிகழ்வுகள் இனிதாக அமைந்து உற்சாகத்தை கொடுக்கும். எந்த செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி பூர்த்தியாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகவே இருக்கும். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டக் கூடும்.இன்று திட்டமிட்ட படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும். மாணவர்கள் கல்வி பற்றிய பயம் விலகி சிறப்பான முன்னேற்றம் இருக்கும். எடுக்கும் முயற்சிகளும் சாதகமான பலனையே கொடுக்கும். சக மாணவர்களும் நல்லுணர்வு காணப்படும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணவரவு உங்கள் கையில் வந்து சேரும்.
உங்களுடைய செயல் திறமையும் இன்று அதிகரிக்கும். இன்று எந்த ஒரு காரியத்தையும் திறம்படவே நீங்கள் செய்து முடிப்பீர்கள். மாணவச் செல்வங்கள் தேர்வு முடியும் வரை உணவு கட்டுப்பாட்டில் இருப்பது ரொம்ப நல்லது. காரமான உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாகவே அமையும். அதுமட்டுமில்லை இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்