Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு… தெய்விக சிந்தனை மேலோங்கும்.. சுபகாரிய பேச்சு முடிவாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாளாகவே இருக்கும். நீங்கள் தேடிச் சென்று பார்க்க நினைத்த நபர் உங்களை தேடி வரக்கூடும். குடும்ப நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சுபகாரிய பேச்சு முடிவாகும். பிறருக்கு கொடுக்கும் பணத்தையும் எளிதில் வசூலிக்க முடியாத நிலைகள் கொஞ்சம் ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சற்று தள்ளிவைப்பது ரொம்ப நல்லது. புத்திர வழியில் சுப செலவுகள் கொஞ்சம் ஏற்படக்கூடும். பணிபுரியக்கூடிய பெண்களுக்கு இன்று வேலை பளுவும் சற்று அதிகரிக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும், கவலை வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று  சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்ட திசை:-தெற்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |