விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி கொடுக்கும் நாளாகவே இருக்கும். இடமாற்றம் பற்றிய தகவல்கள் வந்துசேரும். உற்றார் உறவினர்களின் வழியில் சிறிய விரயம் உண்டாகும். பழைய சொத்துக்களை உங்களுடைய நேரடி பார்வையில் பாதுகாப்பது ரொம்ப நல்லது. இதுவரை தொழிலில் இருந்த தொய்வு ஓரளவு தீரும். லாபம் படிப்படியாக உயரும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும் முடியும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும். பணவரவை பொருத்தவரை எந்த பிரச்சினையுமில்லை, சிறப்பாகவே வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு பற்றிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். வேலை பளு கூடும், நெருக்கடிகள் கொஞ்சம் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். எச்சரிக்கையாக இருங்கள் மற்ற விஷயங்களை தயவு செய்து நீங்கள் செய்ய வேண்டாம். குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சினை கொஞ்சம் தலை தூக்கலாம். உங்களுடைய கருத்துக்கு மாற்றுக் கருத்துகளை தெரிவிக்கலாம், பேசும்பொழுது நிதானமாகவே பேசுங்கள்.
கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவது நன்மையை கொடுக்கும். பிள்ளைகளிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த காரிய நல்லபடியாகவே நடந்து முடியும். ஆனால் செலவு மட்டும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இல்லத்தில் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் மஞ்சள் நிறம்