விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்களின் சேர்க்கை உருவாகும். பகை ஒன்று இன்று நட்பாக கூடும். பிள்ளைகளின் வழியில் பெருமையான தகவல்கள் வந்து சேரும். அயல்நாட்டு முயற்சியில் அனுபவத்தை கொடுக்கும். இன்று சக கலைஞர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியை கொடுக்கும். கடன்கள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். மாணவ, மாணவியர் கல்வியில் நல்ல முன்னேற்றம் உடன் எதிர்பார்த்த மதிப்பெண் பெற முடியும் என்றாலும், பெரிய கெடுதிகள் இல்லை.
கொஞ்சம் மனதை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப நல்லது. நிதானமாகவும் இருங்கள், கூடுமானவரை தேவையற்ற பொழுது போக்குகளையும், நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது ரொம்ப நல்லது. தேர்வு முடியும் வரை நிதானமாகவே இருங்கள். அது மட்டுமில்லாமல் இன்று கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் ஓரளவு சிறப்பை கொடுக்கும். கணவன்-மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் சரியாகும். நிதி மேலாண்மை ஓரளவு சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணம் நல்லபடியாகவே இருக்கும்.
புதிய அனுபவத்தை கொடுக்கும். லாபத்தையும் அது ஈட்டித்தரும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுப்பதற்கு வாரவாரம் பழகிக்கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்