Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு… புகழ் கூடும்… வாழ்க்கையில் சந்தோசம் உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று புகழ் பெருமை யாவும் உங்களுக்கு அதிகமாகவே கிடைக்கும். உடனிருப்பவர்களின் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மக்களின் ஆதரவை இன்று நீங்கள் பெறுவீர்கள். மேடை பேச்சுகளில் சற்று கவனமாக பேசினாலே போதுமானதாக இருக்கும். இன்று குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் ஓரளவு தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மற்றவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் தேவையான பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள்.

கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் சந்தோஷம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மையான சூழல் அமையும். உங்களுக்கு சிந்தனை திறன்  அதிகரிக்கும். கல்வியில் வெற்றி வாய்ப்புகளும் கூடும்,  நல்ல மதிப்பெண்களையும் எடுக்கக்கூடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு எப்பொழுதும் போலவே அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |