விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் இனம் புரியாத வருத்தம் கொஞ்சம் ஏற்படும். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு நல்வழியை கொடுக்கும். தொழில் வியாபார வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பயன்தராத பொருட்களை தயவுசெய்து விலைக்கு வாங்க வேண்டாம். இன்று அடுத்தவர்களுக்கு உதவ போய் வீன் பிரச்சினையில் சிக்கிக் கொள்ள நேரலாம் , கவனமாக இருப்பது நல்லது.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடையமுடியும். தொழிலாளர்களின் ஆதரவும் அமோகமாக இருக்கும். வெளியூர் வெளிநாடு தொடர்புடையவற்றால் நல்ல மேன்மை உண்டாகும். இன்றைய நாள் கொஞ்சம் அப்படியும், இப்படியும் ஆகவே இருக்கும், கவலை கொள்ளாதீர்கள். பொறுமையாக இருங்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் :ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்